வெள்ளி, ஆகஸ்ட் 27, 2010

மனசுஒரு நாளே இட்ட குறை,
நிதமும் துரத்தும்
கிழட்டு பிச்சைக்காரி.
இரண்டு நாளாய்க்
காணாதவளைக் கண்தேடும்..
நினைவில் துரத்துவாள்  கொஞ்ச தூரம்..... 

2 comments:

சாய் சொன்னது…

உண்மை. எனக்கு பெங்களூரில் 90 இல் கைநெடிக் ஹோண்டாவில் செல்லும்போது பல தடவை இப்படி தோன்றியது உண்டு. நம் அவசரத்தில் "சீ போ" என்போம். ஆனால் சில நாள் அவர்கள் வரவில்லையே என்று தோன்றியது உண்டு ? சில சமயம் அவர்கள் கையில் இருக்கும் சிறு குழந்தை "என்னை தூக்கிக்கொள்" என்று கெஞ்சுவது போலிருக்கும்.

மோகன்ஜி சொன்னது…

வருகைக்கு நன்றி பிள்ளைகளுக்கெல்லாம் தமிழ் எழுத படிக்க வருகிறதா சாய்ஜி ?உங்கள french கவர்ச்சிகரமாய் இருக்கிறது.நானும் கொஞ்சகாலம் ஆசையாய் வைத்திருந்தேன்.மக்கள் கொஞ்சம் அழகா இருக்க விட்டால் தானே?எடு எடு என்று ஒரு வழி பண்ணி விட்டார்கள்.So nice.shall keep in touch.அனைவருக்கும் என் அன்பு.