வியாழன், ஆகஸ்ட் 26, 2010

வந்துட்டாருய்யா ஞொய்யாஞ்ஜி !

அசர வைக்கும் அறிவுவெளிப்பாடு.!
எதிர்பாராத சிந்தனைச் சிதறல்கள் !
எதிராளியை திகைக்கச் செய்யும்
ஞானத் திறன்பாடு... .
ஆஹா... ஆஹா...
சிங்கு .. சீச்சீ.....சிங்கம் ஒண்ணு புறப்பட்டதே !
எத்தனை நாள் தான் இப்படிப் பட்ட ஒரு மேதாவிக்காக,
மாநிலம் விட்டு மாநிலம் தேடி அலைவது.?
இது நியாயமா? தர்மமா??
இப்படியெல்லாம் ஜோக் பதிய வேண்டியிருந்ததைப் பற்றி, வெட்கப் பட்டேன் ,வேதனைப் பட்டேன், வருத்தப் பட்டேன்.

விட்ருவோமா? விட்ருவோமா??
கூட்டியாந்துட்டோமில்ல....
யார?
நம் நேசத்துக்கும் பாசத்துக்கும் உரிய
திரு ஞொய்யாஞ்ஜி !

கொளுத்துங்கய்யா ஒரு தவுசண்ட் வாலாவை...

இனிமே இவரு தாங்க நம் தமிழ் கூறும் நல்லுலகின்
அறிவுக் கொழுந்து... 
இனி நம் காதில் விழுந்தவை,கருத்தில் உதித்தவை எல்லாமே திரு.ஞொய்யாளுஜி  அவர்களின் வார்த்தைப் பூக்களாய் உதிரும்.
ஒரு சின்ன ஒப்பனிங்குடன் இன்னிங்சை துவக்குகிறார் ஞொய்யாளுஜி !

ஓர் இண்டர்வ்யுவில் நம் ஞொய்யாளுஜி கலந்து கொண்டார்.
அவரை அதிகாரி கேட்ட கேள்வி:
பலமாடி கட்டிடத்தின் உச்சியில் நீங்கள் இருப்பது போலவும், திடீரென்று பூகம்பம் வருவது போலவும் கற்பனை பண்ணிக்குங்க.
எப்பிடி அதிலிருந்து தப்புவீங்க?
ஞொய்யாளுஜி : இது ஒரு கேள்வியா? கற்பனய நிறுத்திட்டா போதுமே. தப்பிச்சிரலாமே?

ரெண்டு சொம்பு தண்ணி குடித்து விட்டு வந்து அதிகாரி மீண்டும் கேள்வி கேட்டார்.,மிஸ்டர் ஞொய்யாளுஜி ! உங்களுக்கு M.S.OFFICE  தெரியுமா?

ஞொய்யாளுஜி : “M.S.OFFICE தானே.அவங்க  அட்ரஸக்  குடுங்க. தெரிஞ்சிகிட்டு  வந்துடுறேன்

என்ன அன்பர்களே! நம்மாள பிடிச்சிருச்சா ?
ஞொய்யாளுஜி லீலைகளை மேலும் ரசிக்க ,
ஜோக்கைப் படிக்கும் போது, பேக் ரவுண்டுல
தார தப்பட்ட ஒலிக்கணும்.

நம் ஞொய்யாளுஜி கார்னருக்கு அப்பப்ப வருகைத் தாருங்கள். பின்னூட்டம் இட்டு உற்சாகப் படுத்துங்கள்.
ஞொய்யோ ! ஞொய்யோ !

.      

7 comments:

பத்மநாபன் சொன்னது…

ஞொய்யாளுஜி யத்தான் ரொம்ப நாளா தேடிட்டு இருக்கேன்..இவரு தானே தஞ்சாவூர் ரயில்ல விழுப்புரத்துல ஆள் மாத்தி தள்ளி விட்டவரு..இனி என்னென்ன செய்யப்போறாரோ?
வருக வருக ஞொய்யாளுஜி ..உங்கள் ஞொய்யல்களை ஆரம்பிங்க...

Chitra சொன்னது…

ஆஹா..... நடத்துங்க.... நடத்துங்க....

மோகன்ஜி சொன்னது…

பத்மநாபன், நீங்க போனதரம் மாத்து வாங்கறதுக்களுக்குள்ள மாறிடுவோம்னு சொன்ன பிறகு தான் அவதாரம் எடுத்தார்
ஞொய்யாளுஜி... அவர நம்மாளா சுவீகாரம் எடுத்தப்பறமும் இன்னும் என்ன தயக்கம்?.அடுத்த ஞொய்யாளுஜி கார்னர் உங்க பதிவுல போடுங்கஜி. தொடர்பதிவா கொஞ்ச நாள் கும்மியடிப்போம்.முதல் சான்சே உங்களுக்கு தான். என்னா நீங்கதானே என்ன கிணத்துல தள்ளி விட்டது?!

மோகன்ஜி சொன்னது…

என்னடா வலையே பிரகாசமாயிடுச்சேன்னு பாத்தேன் .வாங்க சித்ரா வாங்க.

அப்பாதுரை சொன்னது…

'ஜி' தமிழ் ஆளில்லங்களே?

மோகன்ஜி சொன்னது…

அவரு மாதிரிதான் இவருங்கறதுக்காக வச்ச டர்பன் தாங்க 'ஜி'ன்னு
வச்சுக்ககுங்களேன்

அப்பாதுரை சொன்னது…

>ஜி'ன்னு வச்சுக்ககுங்களேன்

ஞொய்யாசாமி?
ஜினே வச்சுக்குவோம், விடுங்க. :)