வெள்ளி, ஆகஸ்ட் 27, 2010

ஞொய்யாஞ்ஜி கார்னர்-2



(எங்கோ கேட்டதை, தமிழில் நான் திரு ஞொய்யாஞ்ஜிக்கு சொல்ல,
 இனி அவர் பாடு உங்க பாடு )

ஞொய்யாஞ்ஜி சம்சாரத்துடன் எகிப்து சென்றார்.
பிரமிடுகள்,. பாடம் பண்ணப் பட்ட மம்மி
எல்லாம்  பார்த்து வரும் போது, அவரின் சம்சாரம்
மம்மியை பற்றிக் கேட்டாள்,

எப்பிடிங்க செத்திருப்பா?
ஞொய்யாஞ்ஜி :" பார்த்தாலே தெரியலை? தண்ணிலாரி
இடிச்சுத்தான்.. எவ்ளோ பாண்டேஜ் பாரு.".

மம்மியை இன்னும் உற்றுப் பார்த்து விட்டு,அதில் குறித்திருந்த
கி.மு. 550 எனும் வருடக் குறிப்பைக் கண்டு கத்தினார்

.இடிச்சவன் தைரியத்தைப் பாரு. பாண்டேஜ் மேலேயே லாரி நம்பர்  எழுதிட்டு போயிருக்கிறான்


மம்மியைப் பார்த்த டென்ஷனில் இருந்த ஞொய்யாஞ்ஜியை
இமிக்ரேஷன் அதிகாரி கேட்டார் எங்க பிறந்தீங்க?
ஞொய்யாஞ்ஜி: இந்தியா
இமிக்ரேஷன் அதிகாரி: இந்தியா சரி, எந்த பார்ட்?
ஞொய்யாஞ்ஜி: அது என்ன பார்ட்.. என் மொத்த பாடியுமே இந்தியால ஒரே தடவைல பிறந்தது. பார்ட்டாம் பார்ட்!





7 comments:

Chitra சொன்னது…

ஆஹா.... என்னா பதிலு!!!

மோகன்ஜி சொன்னது…

நன்றி சித்ரா. என் வானவில்லுக்கு அடிக்கடி வரும் வானம்பாடியே! வாழ்க வாழ்க! உங்கள் சக வானம்பாடிகள் சிலரையும் இழுத்துக்கிட்டு வாங்களேன்.உங்கள ரெசிபி கேட்டிருக்கேன்.நினைவிருக்கா?

பத்மநாபன் சொன்னது…

உங்க அன்பு அழைப்பிணங்க நம்மாளு ஞொய்யாளுவை ரெடி பண்ணறதுக்குள்ள போட்டு தாக்கிட்டிங்க.
( இந்த நகைச்சுவை ரெடி பண்ணி வரைவுல வெச்சிருந்தேன் ) உங்க வேகமே தனி.... யார் போட்ட என்ன நல்ல மனம் விட்டு சிரிச்சா ஆச்சு.

நிங்க நல்லா மேக்- அப் போட்டுஞொய்யாளுவை இறக்கிவிடறிங்க....

சிக்கிரம் நம்ம ஞொய்யாளுவை கொண்டு வருகிறேன்.

மோகன்ஜி சொன்னது…

பத்மநாபன் சார்,கொஞ்சம் உணர்ச்சிவசப் பட்டு டக்குன்னு இறக்கிட்டேன். நம்ம கொய்யாளுவ கொஞ்ச நாளைக்கு ஜோடன பண்ணியே இறக்குவோம்.புது மாப்பிள்ள இல்லையா? ஆவலுடன் காத்திருக்கிறேன் உடன்பிறப்பே!

அப்பாதுரை சொன்னது…

வாய் விட்டு சிரிச்ச ஜோக்.

மோகன்ஜி சொன்னது…

அப்பாதுரை சார் ! நீங்க ரசிச்சதுக்கு நன்றி. நீங்க என்னைக் கலாய்த்த 'விரல் ஜுரம்'பற்றி, எங்க மேலாளர்களுக்கு இன்று வகுப்பெடுக்கும் போது சொன்னேன்! ரசித்தார்கள்!!

Unknown சொன்னது…

Awasome peddu