ஞாயிறு, ஆகஸ்ட் 15, 2010

பல்லைக் காட்டாதீங்க ப்ளீஸ் !


பல்லு போனா சொல்லு போச்சு

பல்லைத் தட்டிக் கையில குடுத்திடுவேன்

பூண்டு நாலு பல்லு எடுத்துக்குங்க.. அதை இஞ்சியோட சேர்த்து...

முப்பத்திரண்டு பல்லையும் காட்றான் பாரு!””

பொக்கப் பல்லு பொரி உண்டை
ஓட்டாஞ்சில்லு ஓரட்டான்கை

அவனா? அவனுக்கு வயத்தில பல்லாச்சே!


மூடுறா... பல்லைத் தட்டி பல்லாங்குழி ஆடிடுவேன்

இடித்த வெற்றிலைப் பாக்குச் சுவை பல் விழுந்த பருவத்தில்

 புத்தரின் பல் ஒரு புனிதப் பேழையில் பாதுகாப்பாய்....


நான் பழச நெனக்கையிலே
பல்லறுவா பட்டுருச்சி



அரிசிப் பல்லு
துருவிப் பல்லு
தெற்றுப்  பல்லு
காறைப் பல்லு
பனங்காப் பல்லு
சிங்கப் பல்லு
சொத்தைப் பல்லு......

என்ன சார் யோசிக்கிறீங்க?
என்னடா பல்லு பல்லுன்னு பல்லைக்  காட்றேன்னு பாக்குறீங்களா?

பல் டாக்டர் கிளினிக்கில் உட்கார்ந்து கொண்டு தான் இந்த குருட்டு யோசனை....

 என்  மனைவிக்கு உள்ளே பல்லில் சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது .

ரெண்டு மணி நேரமா அவளும் என்னிடத்தில் பல்லில் நாக்குபட பேசவில்லை

பேசிக் கொண்டே இருப்பவர்கள் திடீரென்று பேசாமல் இருப்பதும்,
பேசவே பேசாதவர்கள் பேச ஆரம்பிப்பதுவும்
ஏற்றுக் கொள்ள கஷ்டமான விஷயம் தான்

பல்லு பத்தி வேறேதும் உண்டா?

ஹாங் ... கே. ஆர். விஜயா, ஸ்நேகா

முத்துப் பல் சிரிப்பென்னவோ?


முத்து, தன் அழகை எண்ணி இறுமாப்பாய் இருந்ததாம். ஒரு அழகியின் அழகான பல் வரிசை தன்னை விட அழகாய் ஜொலிப்பது கண்டு, மனம் வெம்பி , தூக்கிலிட்டுக் கொண்டு உயிரை விட்டு விட முடிவு செய்ததாம். அந்த பல் வரிசைக்கெதிரிலேயே, அந்த அழகியின் மூக்கில் புல்லாக்காய்த் 
தொங்கி விட்டதாம்!!

தமிழா! தமிழா! ரசிகன்டா நீ!!  

சார்.. மேடம் ஈஸ் ஆல்ரைட்

பீஸ் டாக்டர்?

“5000”

உம். கிரெடிட் கார்டு வாங்கிப்பீங்களா?.. பல்லைக் காட்டினேன்.

ஒய் நாட்நீங்க N.T.R மாதிரி சிரிக்கிறீங்க!

தாங்க் யூ டாக்டர்!.... எனக்கு வாயெல்லாம் பல்!

ஆனா நீங்க ஒரு தரம் பல்லை சுத்தம் பண்ணிக்கணும். ஸ்கேலிங்.. ஒரு சிட்டிங் வந்துருங்களேன்?

சரி டாக்டர்

யோசனையுடன் திரும்பினேன்...


உங்களைத்தான் சார்... அப்ப நீங்க கூட என்  அடுத்த பதிவுக்கு தயாரா 
இருங்க! 
பல்லு படாம 'கடிப்பது' ஒரு கலை சார்!

வரட்டா ??



Enhanced by Zemanta

4 comments:

பெசொவி சொன்னது…

:)

பெயரில்லா சொன்னது…

ipdilaaan room pottu yosipingalo

பத்மநாபன் சொன்னது…

சிரிச்சு பல்லு சுளுக்கிருச்சு போங்க..
பல்லில் பல் சுவை நகைச்சுவை. பல் டாக்டரிடம் காத்திருப்பு எல்லா இடத்திலும் பொதுவானது. சென்றமுறை காத்திருப்பில் சுஜாதாவின் ஒரு முழு நாவலை படித்து முடித்தேன்..அந்த நாவல் ’ஆ’ அப்புறம் டாக்டரிடம் ’ஆ’

மோகன்ஜி சொன்னது…

அது ஒரு சுவையான நாவல். சுஜாதாவின் மறைவை இன்னும் கூட மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. வருகைக்கு நன்றி பத்மநாபன்ஜி. என் மற்ற இடுகைகளைப் பார்த்தீர்களா?
தொடர்பில் இருப்போம்.