வெள்ளி, ஆகஸ்ட் 20, 2010

சர்தார்ஜிக்கு ஒரு ஸாரி



இப்போ கலைஞர் டி,வி,ல அபியும் நானும் ஓடிகிட்டு இருக்கு. அதுல,சர்தார்ஜிக்களில் பிச்சைக்காரனே கெடயாதுன்னும் நம்ம தான் சர்தார்ஜி ஜோக் சொல்லிட்டு திரியறோம்னு சொன்னாங்க,
ரொம்ப மன்சு பேஜாராயிட்டுதுங்க.. ஒங்களுக்கும் அப்பிடித்தானே இருக்கும்? வருத்தபடாதீங்க.. மனசு சந்தோசப் படறாமாதிரி எனக்கு வந்த ரெண்டு ஜோக்க சொல்றேன்,சர்தார்ஜிக்கு ஒரு ஸாரியோட....

ஜோக்-1

வெளிநாடுகளுக்குப் போய்வந்த பின் சர்தார்ஜி மனைவியிடம் கேட்டார்.,என்னப் பாத்தா பாரினர் மாதிரியா இருக்கு?
மனைவி: இல்லையே!
சர்தார்ஜி: பின்ன லண்டன்ல ஒருத்தன் என்னை நீ பாரினரான்னு கேட்டானே?


  ஜோக்-2
 சர்தார்ஜி தன் மனைவியுடன் ஆட்டோவில் போய்க்  கொண்டிருந்தார். ஆட்டோ டிரைவர் ஆட்டோ கண்ணாடியை அட்ஜஸ்ட் செய்து சர்தாரினியை கடைக்கண்ணால் நோட்டமிடுவதை சர்தார்ஜி பார்த்து விட்டார்.

கோபத்துடன் கத்தினார்.. ங்கொய்யால! முன்னால இருந்து கண்ணாடி வழியாவா பாக்குற? ஒழுங்கா பின்னாடி வந்து ஒக்காரு. நான் வண்டிய ஓட்டுறேன்... பிச்சு புடுவேன் பிச்சு!!

8 comments:

பத்மநாபன் சொன்னது…

பஞ்சாப் ``ங்கொய்யால``கூட நல்லாத்தான் இருக்கு. பலெ பலெ பலே...

மோகன்ஜி சொன்னது…

டர்பன் கட்டி தாடி வச்சா எல்லாஜீயும் சர்தார்ஜி தானே?(மோகன்ஜி உட்பட)தமிழ் கூறும் நல்லுலகில்,"உல்லு கே பட்டே"வை ``ங்கொய்யால`` என்பது தானே முறை பத்மநாபன்?!

எம் அப்துல் காதர் சொன்னது…

ஜோக்ஸ் அருமை பாஸ்

பத்மநாபன் சொன்னது…

மோகன்ஜி..எனக்கு சுத்தமா இந்தி ராது வராது.. "உல்லு கே பட்டே" என்னன்னு நீங்களே சொல்லிருங்க..செம்மொழியாருந்தா தவிர்த்திருங்க...`ங்கொய்யால`` மாதிரி சாதரண சைவ அர்ச்சனையா இருந்தா ரசிச்சு சிரிச்சுக்கலாம்.

RVS சொன்னது…

மோகன்ஜி மனசுக்குள்ளே தூங்க்கிட்டிருந்த சர்தாரை கிளப்பி வேடிக்கை பார்க்குறீங்க.. புடிங்க ஒரு புத்திசாலி சர்தாரை இப்ப...

ஒரு சர்தார் மேக்அப் டேபிள் கண்ணாடி வாங்கப் போனார். கடைக்காரனிடம் "இதுக்கு கியாரண்டீ உண்டா..." என்றார். கடைக்காரன் ஒரு தடவை முழுசா சர்தாரை பார்த்துட்டு "இதுக்கெல்லாம் கிடையாதுங்க..." , சர்தார் , "கியாரண்டீ குடுத்தா இதை வாங்கிக்கிறேன்" என்றார் உடனே தலைவரோட லெவெல பார்த்துட்டு "சார் இதுக்கு கியாரண்டீ இருக்கு.. ஆனா அதுக்கு ஒரு கண்டீஷன். " என்றான் கடைக்காரன். சர்தார் "என்ன?" என்றார். "இந்தக் கண்ணாடியை நூறாவது மாடியிலிருந்து தூக்கி போட்டா, 99 மாடி வரை உடையாம இருக்கிரத்துக்கு கியாரண்டீ" என்றான். சர்தார் மகிழ்ச்சியாக "உடனே.. பாக் பண்ணி அனுப்புப்பா.. முன்னாடியே சொல்லியிருந்தா இவ்வளவு பேசியிருக்க மாட்டேன்ல... " என்றாராம்.
இது எப்படி இருக்கு?...

அன்புடன் ஆர்.வி.எஸ்.

மோகன்ஜி சொன்னது…

பத்மநாபான்ஜி ,நான் ரொம்பவே சைவம் பாஸ் . அப்படீன்னா 'ஆந்தைப் பயலே'ன்னு அர்த்தம்

மோகன்ஜி சொன்னது…

காதர்பாய்,நன்றி.நோன்பெல்லாம் எப்டி போயிட்டிருக்கு?

மோகன்ஜி சொன்னது…

RVS,ஜோக் பிரமாதம். ஒரு 'சர்தார்ஜி கார்னர்' ஆரம்பிச்சா என்ன பாஸ்?