திங்கள், ஜூலை 25, 2011


அன்பின் வலைச் சொந்தங்களே!

அனைவருக்கும் என் வணக்கங்கள். சகோதரர் சீனாவின் உரிமையான அழைப்பை ஏற்று இந்த வாரம் வலைச்சரத்தின் ஆசிரியனாய் உங்கள் முன்னே நான்.

முதல் பதிவு, என் பதிவுகள் பற்றியதாய் இருக்க வேண்டியது மரபென்பதால் சற்று கூச்சத்துடன் சுயபேரிகை முழக்கத் துணிந்தேன் .

ஓராண்டுக்கு முன்பே பதிவுலகில் அடியெடுத்து வைத்தேன். எனது கவிதைகளையும், கதைகளையும் , இலக்கிய ரசனையையும் ரசிக்கும் எனது நண்பர் குழாம் கொடுத்த தூண்டுதலால் வானவில் மனிதன் எனும் வலைப்பூவை  தொடங்கலாயிற்று.

நான் வலைக்கு வந்த வேலையையே இன்னமும் துவக்கவில்லை என்றே தோன்றுகிறது. பதிவுலகம் எனக்கு பல நட்புகளையும் சொந்தங்களையும் வாரிக் கொடுத்திருக்கிறது என்பதை நான் செய்த பாக்கியமாய் உணர்கிறேன். பின்னூட்டங்களிலும், மின்னஞ்சலிலும், அலைபேசியிலும் தொடர்பு கொள்ளும்  இந்த அன்பு நெஞ்சங்களை வேறெப்படி கொள்வது? எதிர்பார்ப்புகள் இல்லாத இனிய உறவுகள்.

இனி எனது பதிவுகளில் சில....

1.கதைகள் 
1. வெளையாட்டு: ஊர் விட்டு நகரத்திற்கு முதன் முதலாய் வேலைக்குப் போகும் இளைஞன் எதிர்கொள்ளும் உணர்ச்சிப் போராட்டமும், சந்திக்கும் மனிதர்களும் ,மெல்ல புரிபடும் யதார்த்தங்களுமாய் ஒரு கதை.

2.வடு : பல வருடம் வேலை பார்த்த ஒரு அலுவலக இடமாற்றம் கிளர்த்தும் மன உணர்வுகளும் , எங்கோ உயிர்த்துக் கனன்று கொண்டிருந்த ஒரு காதலின் நெருடலும்.

3. பச்ச மொழகா :  ஒரு சிறிய ஹோட்டல் நடத்துபவரின் கதை

4.ஞாபகங்கள்: ஞாபகங்களை இழந்த ஒரு முதியவரும், அவரைச்‌ சுற்றியுள்ளவர்களுக்கு அவரின் நிலை ஏற்ப்படுத்தும் அதிர்வுகளும்..  ஒரு ஆழமான நட்பின் பின்புலத்தில்....... 


II நிகழ்ந்ததும் நெகிழ்ந்ததும்

என் வாழ்வின் ரசமான தருணங்களையும், சில நிகழ்வுகளின் தாக்கங்களையும்  வெளிப்படுத்திய பதிவுகள் சில ...


 ஒரு சிறுவனாய் அம்மாவிடம் கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு ஓடியதும், அந்த அசாதாரணமான சூழலை என் அம்மா எதிர்கொண்ட விதமும் ...


உடன் படித்த பள்ளித் தோழியைக் கடித்த வைபவம்! பின்னர் அவளை சந்தித்த சூழலில் நினைவுறுத்தப் பட்ட இந்த நிகழ்வை உள்ளதுஉள்ளபடி விவரித்த பதிவு.


ஒரு தொடர்பதிவுக்காக பெயர்க்காரணத்தை நகைச்சுவையாய் சொன்ன பதிவு.


வாயார தமிழில் பேச முடியாத ஒரு சூழலை கற்பனை செய்து பாருங்கள். எனக்கு அப்படி ஒரு நிலை வந்தபோது நான் ஏங்கிய ஏக்கமும், செய்த காரியங்களும்.  


கிராமத்து பள்ளிச் சிறுவர்கள் பலரை காரில் அடைத்துக் கொண்டு பயணம் போன ஒரு நிகழ்வின் நெகிழ்வு...


ஹைதராபாத்தில் என் வீட்டில் களவு போனது. அந்த தருணத்து நிகழ்வுகள்.


III ஆன்மீகம்


வெண்ணைத் திருடிய மாயக் கண்ணனுக்கும் ஒரு வெள்ளிமணிக்கும் நடந்த ஒரு உடன்படிக்கை பற்றிய கதை


திருப்புகழ் தந்த அருணகிரியாரின் வாழ்வில் சில சம்பவங்கள் .



சனிபகவானுக்கும் ஐயப்பஸ்வாமிக்கும் நடந்த உரையாடல். சபரிமலையில் மகரஜோதியின் போது நிகழ்ந்த துயர சம்பவம் நினைவுறுத்திய வரலாறு.


 IV நகைச்சுவை 


 வரமும் கொடுத்து வம்பும் செய்த பிள்ளையார் பற்றின நகைச்சுவை


ஒரு யானைப் பற்றின நகைச்சுவை.. பின்னூட்ட கும்மியால் மிகவும் பிரபலமானது. நண்பர்கள் ஆர்.வீ.எஸ் மற்றும் பத்மநாபனுடன் அடித்த கும்மியை  அவ்வப்போது பதிவர்கள் பலர் நினைவு கூர்வதுண்டு.  இந்தப் பின்னூட்டங்களை  வைத்தே ஆர்.வீ.எஸ் ஒரு பதிவும் இட்டு விளையாடியது நினைவிலாடுகிறது. 


ஒரு காதல் ஜோடியின் கடுமையான ஊடலில் நான் உள்ளம் கொதித்த நிகழ்வு.



சக பதிவர்களைப் பற்றி கிசுகிசு எழுதிப் போட்டு அடித்த கும்மாளம்.


மேலும் சிலரை வம்புக்கிழுத்தது.


ஏன் நாங்களெல்லாம் சமையல் குறிப்பு எழுத மாட்டோமா என்று நகைச்சுவையுடன் கணவர்களை வறுத்த குறிப்பு.


 V இலக்கியம் 

1.மருந்தோ மருந்து    திரிகடுகம் பற்றின பதிவு.

2.கனாக் கண்டேனடி தோழி : சில இலக்கிய கனவு சங்கப் பாடல்கள் அறிமுகம். 

3.லொள்ளப் பாரு எகத்தாளத்தப் பாரு:  முள்ளு குத்தினதுக்கெல்லாம் பாட்டுங்க!

4.கம்பன் ஏமாந்தான் :  கம்பனும் ஔவையும் மோதிக்கொண்ட பாடல் சர்ச்சை 

VI  வாழ்வியல்.




VI கவிதைப் பரணிலிருந்து









பதிவு நீண்டு விட்டதோ.? மேற்கண்ட பதிவுகளுக்கு பின்னூட்டங்கள் மேலும் மெருகூட்டி யிருப்பதாய் உணர்கிறேன். அவற்றையும் ,  அந்த விவாதங்களையும் சற்று பாருங்கள்.

இனி சுய புராணம் இருக்காது. ஒரு வாரம் உங்களோடு... சந்திப்போம் சொந்தங்களே!








     

26 comments:

மனோ சாமிநாதன் சொன்னது…

வலைச்சர ஆசிரியர் பொறுப்பேறதற்கு இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்!!

மோகன்ஜி சொன்னது…

நன்றி மேடம்! உங்கள் தொடர் பதிவை நீங்கள் ரசிக்கும் வண்ணம் விரைவில் எழுதுவேன்.

ஹேமா சொன்னது…

வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள்.
நிறையவே பாடங்களை எதிர்பார்க்கிறோம் !

மோகன்ஜி சொன்னது…

நன்றி என் தங்கையே! நான் வலைச்சரம் தொடுத்தாலும் பூச்சரம் தொடுத்தாலும்,அவை எல்லாம் உனக்குத் தானே ஹேமா ?!

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

ஆஹா! வலைச்சர ஆசிரியராக நம் வானவில் மோஹன்ஜி! மகிழ்ச்சி.

தங்களின் இந்தப்புதிய பணி சிறப்பாக அமைய என் அன்பான வாழ்த்துக்கள்.

அப்பாதுரை சொன்னது…

வாழ்த்துக்கள்.

ஙொய்யாஜியை விட்டுட்டீங்களே? (நிஜமாவே)

அம்பாளடியாள் சொன்னது…

வலைச்சர ஆசிரியர் பொறுப்புக் கிடைக்கப்பெற்றமைக்கு
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.பணி சிறப்பாகத் தொடரட்டும்.........

ஸ்ரீராம். சொன்னது…

வாழ்த்துகள்...

பத்மநாபன் சொன்னது…

வலைச்சர சிறப்பாசிரியர் பணிக்கு இனிய நல் வாழ்த்துகள்...

உங்கள்,கதைகளும்,கட்டுரைகளும், கவிதைகளும்..தமிழுக்கு கிடைத்த வலை நூலகம்...

சிறப்பாக தொடர மீண்டும் வாழ்த்துகள்

இராஜராஜேஸ்வரி சொன்னது…

வானவில்லாய் மகிழ்ச்சியூட்டிய அழகிய பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

சகோ!
தங்களுக்கு,
பொறுப்பாசிரியர், கொடுத்த
சிறப்பாசிரியர் பதவிக்கு முதற்கண் வாழ்த்துக்கள்
முதல் பதிவே அருமை!
தொடர்ந்தது எழுதுவீர்! நன்றி

புலவர் சா இராமாநுசம்

'பரிவை' சே.குமார் சொன்னது…

வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள்.

ADHI VENKAT சொன்னது…

வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

G.M Balasubramaniam சொன்னது…

வானவில் மனிதருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Yaathoramani.blogspot.com சொன்னது…

தாங்கள் ஆசிரியராகப் பொறுப்பேற்றமைக்கு
எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்
ஒரு வாரம் வலைச்சரம் வானவில்லாய் ஜொலிக்கட்டும்

மோகன்ஜி சொன்னது…

வை.கோ சார்! மிக்க நன்றி உங்கள் பாசம் மிகுந்த வாழ்த்துக்கு..

மோகன்ஜி சொன்னது…

அப்பாதுரை! ஞொய்யாந்ஜியை நினைவு வைத்திருக்கிறீர்களா?

meenakshi சொன்னது…

வாழ்த்துக்கள்! விட்டுவிட்டு வரும் வானவில் இப்பொழுது தொடர்ந்து ஒரு வாரமா! இதுவும் ஒரு அதிசயம்தான். :)

மோகன்ஜி சொன்னது…

அம்பாளடியாள்! நன்றி மேடம்

மோகன்ஜி சொன்னது…

நன்றி ஸ்ரீராம் !

மோகன்ஜி சொன்னது…

அன்பின் பத்மநாபன் ! உங்கள் நேசத்துக்கும் வாழ்த்துக்கும் நல்ல படைப்புகளைத் தருவதே பிரதியாக அமையும்.

மோகன்ஜி சொன்னது…

அன்பின் பத்மநாபன் ! உங்கள் நேசத்துக்கும் வாழ்த்துக்கும் நல்ல படைப்புகளைத் தருவதே பிரதியாக அமையும்.

மோகன்ஜி சொன்னது…

அன்பிற்கினிய
@இராஜராஜேஸ்வரி மேடம்!
@ புலவர் இராமானுஜம் ஐயா!
@ குமார் தம்பி!
@ஆதி மேடம்!
@ G.M.B சார்!
@ரமணி சார்!

உங்கள் வாழ்த்துக்கள் என் பொறுப்பை அதிகமாக்குகிறது.

மோகன்ஜி சொன்னது…

மீனாக்ஷி மேடம்!
" விட்டுவிட்டு வரும் வானவில்" ரசித்தேன். விட்டுவிட்டு வந்தால் தான் அது வானவில்.

என்ன செய்வது மேடம்? தற்சமயம் பணியிடம் தள்ளிப் போய் விட்டதால் காலையும் மாலையும் மூன்றரையிலிருந்து நான்கு மணிநேரம் பயணத்திலேயே போய் விடுகிறது.

இனி நிறைய பதிவுகள் இடுவேன். தலையோ பெரிதாகிக் கொண்டே வருகிறது. அது வெடிப்பதற்க்குள் பதிவில் வடித்துவிட வேண்டாமா?

சிவகுமாரன் சொன்னது…

வலைச்சர ஆசிரிய அண்ணாவுக்கு வாழ்த்துக்கள் .

வெங்கட் நாகராஜ் சொன்னது…

இந்த வாரம் உங்கள் வாரம்... கலக்குங்கள் நண்பரே....